கமல்ஹாசன் மற்றும் சிங்கீதம் சீனிவாச ராவ் கூட்டணியில் உருவான ஒரு வித்தியாசமான பிளாக் காமெடி திரைப்படம் இது. காது கேட்காத பைக் ஸ்டண்ட் வீரரான அவினாஷ், ஒரு பணக்காரக் குழந்தையைக் கடத்தத் திட்டமிடும் கும்பலுடன் தற்செயலாக இணைகிறான்.
ஆனால், அவர்கள் கடத்த நினைத்த குழந்தைக்குப் பதிலாக வேறொரு குழந்தையைக் கடத்திவிட, அதனால் ஏற்படும் குழப்பங்களும் நகைச்சுவையானத் திருப்பங்களுமே படத்தின் கதை. பசுபதி மற்றும் கமலஹாசன் இடையிலான காம்போ படத்தில் மிகச்சிறந்த நகைச்சுவைத் தருணங்களை வழங்குகிறது.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் வேகத்திற்குப் பெரும் பலம் சேர்த்தன. டிஜிட்டல் கேமராவில் படமாக்கப்பட்ட ஆரம்பகால தமிழ்ப் படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் நுணுக்கமான நடிப்பும், வசனங்களும் நிறைந்த ஒரு அறிவுபூர்வமான நகைச்சுவைத் திரைப்படம்.