முதல் உலகப் போரின் பின்னணியில் எடுக்கப்பட்ட மிக அற்புதமான திரைப்படம் இது. இரண்டு இளம் பிரிட்டிஷ் வீரர்களுக்கு ஒரு கடினமான பணி வழங்கப்படுகிறது. அவர்கள் எதிரி நாட்டு எல்லைக்குள் புகுந்து, ஒரு முக்கியமான செய்தியை தங்கள் படைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அந்தச் செய்தி சரியான நேரத்தில் சென்றடையவில்லை என்றால், 1,600 வீரர்கள் கொல்லப்படுவார்கள். காலத்துடன் போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் மேற்கொள்ளும் அந்தப் பயணம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும்.
இப்படத்தின் மிகச்சிறந்த அம்சம் அதன் ஒளிப்பதிவு. முழுப்படமும் ஒரே ஷாட்டில் (Single Shot) எடுக்கப்பட்டது போன்ற பிரமையை இயக்குநர் சாம் மென்டிஸ் உருவாக்கியிருப்பார். ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸின் உழைப்பிற்கு இப்படத்திற்காக ஆஸ்கார் விருது கிடைத்தது.
ஒரு போர் வீரனின் பார்வையில் போர்க்களத்தை நேரடியாகக் காண்பது போன்ற உணர்வைத் தரும் ஒரு தொழில்நுட்ப அதிசயம்.